புதன், 21 செப்டம்பர், 2011

தமிழர் மெய்யியல்

தமிழர்கள் அறிவிலும், அறிவியலிலும் , வானியலிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . அதனையொட்டி அடுத்த இடுகையும் இருக்கும் இந்த இடுகை அதனை ஒட்டி இல்லாமலிருந்தாலும் அதை தொட்டு படரும் ஒரு பணியை செய்ய போகிறது .

தமிழின் சிறப்புகள் தமிழர்கள் அறியப்படாமலே இருக்கிறது அதனால் வருகிறதுதான் இந்த அடிமைத்தனம் . முதலில் புத்தனுக்கு முன்பாகவே தோற்றம் கொண்ட பக்குடுக்கை நன்கணியார். சமயம் சரதவராக இருந்திருக்கிறார் . சமயம் சாராமை என்பது அடிப்படையில் கடவுள் மறுப்பை ஒட்டியது என நாம் சொல்ல தேவையில்லை
.
இன்பங்களும் துன்பங்களும் இயற்கையாக நடப்பனவேயன்றி வேறல்ல . இது மனித வாழ்வின் பிரிக்கயியலா கூறுகள் . இதை வலியுறுத்தும் பாடல் ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடப்பட்டு உள்ளது . இது இயங்கியலை அடிப்படியாக கொண்டு இயங்கும் பொருள்முதல் வாத கோட்பாட்டை சேர்ந்ததாகும்
பாடலைப் பார்ப்போம் .....

.ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல் புணர்ந்தோரே !

துறை : பெருங்காஞ்சி (புறநானூறு 194 )
பக்குடுக்கை நன்கணியார் படியாது .

பாடலின் சுருக்கமான கருத்தாக்கம் . இரண்டு தோழிகள் இருவர் , ஒருத்தி மணமானவள் மற்றவள் மணமாக இருப்பவள் . மணமேற்க்க போகும் சூழலில் . திருமணத்தை காணவந்த தோழியின் கணவன் தேரில் இருந்து விழுந்து மரித்து போகிறான் . இந்த சூழலில் மணமுடித்தவள் தன் கணவனுடன் இல்லறம் துய்த்து இன்பத்துடன் இருக்கிறாள் மற்றவள் பறையொலி களின் நடுவே பிணத்துடன் அழுகிறாள் இது முறையானதா? கடவுள் எப்படி ஒருத்தியை இன்பதுடனும் ஒருத்தியை துன்பத்திலும் இருக்கவைக்கிறான் . என வினவுவதாக் இருக்கிறது
இதை பாடிய காலத்தை நாம் சற்று எண்ணிப்பார்ப்பது தேவையாகிறது அதாவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதவே இந்த கருத்தாக்கம் எழுந்தது என்றால் தமிழர்களின் மெய்யறிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என சிந்திப்போம்.
தமிழர்க்கு தீங்கு செய்யும் கூடங்குளம் அணு உலையை உணர்வுடன் எதிர்ப்போம்

வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழர்களின் தாழ்வு எண்ணம் தேவையா?

இப்போது தமிழர்கள் பலருக்கு தங்களின் உயரிய மொழிபற்றியோ, அல்லது இங்கு விரிந்து கிடக்கும் அளவு இல்லாத மெய்மங்களைபற்றியோ அறிந்திருக்கவில்லை . பாவம் இது அவர்களின் பிழை இல்லை என்பது எமது எண்ணம்இந்த உயரிய மொழியை பற்றி அவர்களுக்கு உணர்த்த வில்லை என்பது எமது எண்ணம் . இவர்கள் தமிழையும் படிப்பதில்லை , இவர்கள் மேதாவித்தனம் நிறைந்து உள்ளதாக கூறும் ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழிகளையோ ஊன்றி படிபதில்லை அப்படி படித்தால் அவர்களை தானே தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும் இப்படி பட்டவர்களிடம் யார் வேண்டுமானாலும் என்ன கூறினாலும் அப்படியே நம்பி விடுவார்கள்.
தமிழர்களின் அறிவைத்தவிர, ஆக இந்த மண்டூகங்களுக்கு அறிவு தெளிந்த நாம்தான் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற எண்ணத்தோடு பொறுமையாக சொல்வோம்.

தமிழ செல்வங்கள் அளவில்லாமல் கொட்டி கிடைக்கிறது இதை சீண்ட ஆளில்லாமல் கிடைக்கிறது . அதிலொன்று திருமூலரின் திருமந்திரத்திலிருந்து

சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே .

அதாவது சூரிய காந்தம் என திருமூலர் குறிப்பது இன்று பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் அறியப்படதான லென்சைதான். அதாவது லென்சையும் பஞ்சியையும் ஒன்றாக வைத்து இருந்தால் பஞ்சி எரியாது அதை சூரியனின் குவிமையத்தில் முறைப்படி காட்ட அது பஞ்சை சுட்டு எரிக்கும் என்கிற ரீதியில் பதிவு செய்கிறார் . அதாவது திருமூலரின் காலம் என அறியப்பட்டது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது . இந்த காலங்களில் லென்சை அதன் பயன்பாட்டை தமிழன் அறிந்து வானவெளியில் தமிழன் உயர்ந்து இருந்தமையை காட்டுகிறது . இதை தமிழ் மாடுகளுக்கு நாம் காட்டவேண்டியது நமது தேவையாகிறது . அறிவு துறையினரே நீங்கள்தான் இந்த பக்கத்திற்கு வருகிறீர் நீங்கள்தான் எல்லோருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்

தமிழர் கலைகளை காப்போம் வென்றெடுப்போம்..

நண்பர் சுகுமாரன் இந்த பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் என கேட்டமையலும் .டென்மார்க்கிலிருந்து சந்திரகௌரி தொடர்ந்து எழுத கோரியமையாளும் பதிவு செய்யபடுகிறது . நாம் தொடர்ந்து எழுதமைக்கான காரணம் இந்த பக்கத்திற்கு அதிகமானோரை வரவழைக்க இயலவில்லை எனவேதான்.