புதன், 23 நவம்பர், 2011

உயிர்களின் தோற்றம்



உலக உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்கிறவர்கள் டார்வினின் கோட்பாடுகளில் இருந்தே அல்லது அவர்களின் அறிவுக்கு எட்டிய ...கிடைக்க கூடிய தரவுகளின் அடிப்படையில் தங்களது அறிவை புலப்படுத்துகிறார்கள் . குறிப்பிட்ட துறை பற்றி அறியாமையில் அல்லது அதைப்பற்றிய முழுமையான புரிதலை பெறாதவர்கள் கிடைத்த கொஞ்ச தகவலை வனாலாவ புகழ்ந்து தள்ளிவிடுகிறனர் இங்கு தகவலைப் பெறுகிறவர் குழப்பவாதியாகி மற்றவர்களையும் அழகாக குழப்ப தலைப்படுகிறனர். குழப்பியவர் அறிவாளியாகி இந்த குமுகத்தை குழப்பவாதிகளின் கூடரமாக்கி விடுவார்கள் . எந்த செய்தியையும் பருண்மையாக ஆய்வு செய்தே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ அறிவர்கள் கூறுகிறார்கள் வள்ளுவமும் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என அழாகாக பதிவு செய்கிறது .

இன்று தமிழகத்தில் மருத்துவத்தை மேற்கோள் கட்டுகிறவர்கள் சரகரின் சுசுருத சம்கிதைலிருந்தே மேற்கோள் கட்டுவார்கள் சரகரின் காலம்கிமு ஆறாம் நூற்றாண்டு என்பார்கள் அனால் சமஸ்கிருதம் வரிவடிவம் (எழுத்துவம் )பெற்றதே முதல் நூற்றாண்டில்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் . அனால் சிந்து வெளி காலங் களிலேயே தமிழ மருத்துவம் (சித்த மருத்துவம் ) சிறந்து விளங்கியதை பல ஆய்வுகள் சான்று காட்டுகிறது அதுபோல உயிர்களின் தோற்றம்
மரபியலில்
ஒன்றறிவதுவே உற்றி வ்துவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அதனொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றோடு மனனே .

என பதிவு செய்கிறார்தொல்காப்பியர் அதுமட்டு மில்லாமல் இதை
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினர் எனவும் பதிவு செய்கிறார்
தான் கண்ட அறிவியலை அழுத்தம் திருத்தமாக கூறும்போது
"மக்கள்தாமே ஆறறி உயிரே "(பொருள் மரபியல் 33 ) என தொல்காப்பியர் பதிவு செய்ய தவறவில்லை இவர் எழுத்துக்கும் சொல்லிற்கு மட்டும் இலக்கணம் கண்டவறல்ல மனித வாழ்வியளுக்கே இலக்கணம் கண்டவர் என்பதை நாமறிவோம் .

அந்த வகையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிர்களின் தோற்றத்தை சிறப்பாக அறிவியல் நோக்கில் பதிவு செய்கிறார் ஆக தமிழர்கள் பல்லாயிரமாண்டு களுக்கு முன்னரே அறிவியலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தனர் .உயிர்கள்
புல்லும் மரனும்ஓரரிவினவே (புல், மரம் )
நந்தும் முரலும் ஈரரிவினவே (சங்கு , நத்தை , சிப்பி போன்றவை )
சிதலும் எறும்பும் மூன்றவு உயிர்கள்
நண்டும் ,தும்பியும் நான்கறிவு கொண்டவை
விலங்கு களும் பறவைகளும் ஐந்து அறிவு கொண்டவை
மக்களினமும் பறவைகளும் ஆறறிவு கொண்டவை என பதிவு செய்கிறனர் .
தொட்டால் உணருவது ஒரு அறிவு
இவற்றுடன் சுவை அறிதல் இரண்டறிவு
மூன்றாம் அறிவு நாற்றத்தை உணருதல் (நாற்றம் -மணம்)
நான்காம் அறிவு கண்களினால் காணுதல்
ஐந்தாமறிவு கேட்கும் திறன் பெறுதல்
சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவு .
ஆக உந்த பேரன்டத்திற்க்கே தமிழர்கள் அறிவியலையும் நகாரீகத்தையும் சிறந்த கலைகளையும் வழங்கியவர்கள் என்பது உண்மை . ஆனால் இதை தமிழர் உணராமல் அடிமையாக கிடக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது .

மாறுபட்ட கோணத்தில் அடுத்த பதிவிலும் சிந்திப்போம் .

புதன், 21 செப்டம்பர், 2011

தமிழர் மெய்யியல்

தமிழர்கள் அறிவிலும், அறிவியலிலும் , வானியலிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . அதனையொட்டி அடுத்த இடுகையும் இருக்கும் இந்த இடுகை அதனை ஒட்டி இல்லாமலிருந்தாலும் அதை தொட்டு படரும் ஒரு பணியை செய்ய போகிறது .

தமிழின் சிறப்புகள் தமிழர்கள் அறியப்படாமலே இருக்கிறது அதனால் வருகிறதுதான் இந்த அடிமைத்தனம் . முதலில் புத்தனுக்கு முன்பாகவே தோற்றம் கொண்ட பக்குடுக்கை நன்கணியார். சமயம் சரதவராக இருந்திருக்கிறார் . சமயம் சாராமை என்பது அடிப்படையில் கடவுள் மறுப்பை ஒட்டியது என நாம் சொல்ல தேவையில்லை
.
இன்பங்களும் துன்பங்களும் இயற்கையாக நடப்பனவேயன்றி வேறல்ல . இது மனித வாழ்வின் பிரிக்கயியலா கூறுகள் . இதை வலியுறுத்தும் பாடல் ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடப்பட்டு உள்ளது . இது இயங்கியலை அடிப்படியாக கொண்டு இயங்கும் பொருள்முதல் வாத கோட்பாட்டை சேர்ந்ததாகும்
பாடலைப் பார்ப்போம் .....

.ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல் புணர்ந்தோரே !

துறை : பெருங்காஞ்சி (புறநானூறு 194 )
பக்குடுக்கை நன்கணியார் படியாது .

பாடலின் சுருக்கமான கருத்தாக்கம் . இரண்டு தோழிகள் இருவர் , ஒருத்தி மணமானவள் மற்றவள் மணமாக இருப்பவள் . மணமேற்க்க போகும் சூழலில் . திருமணத்தை காணவந்த தோழியின் கணவன் தேரில் இருந்து விழுந்து மரித்து போகிறான் . இந்த சூழலில் மணமுடித்தவள் தன் கணவனுடன் இல்லறம் துய்த்து இன்பத்துடன் இருக்கிறாள் மற்றவள் பறையொலி களின் நடுவே பிணத்துடன் அழுகிறாள் இது முறையானதா? கடவுள் எப்படி ஒருத்தியை இன்பதுடனும் ஒருத்தியை துன்பத்திலும் இருக்கவைக்கிறான் . என வினவுவதாக் இருக்கிறது
இதை பாடிய காலத்தை நாம் சற்று எண்ணிப்பார்ப்பது தேவையாகிறது அதாவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதவே இந்த கருத்தாக்கம் எழுந்தது என்றால் தமிழர்களின் மெய்யறிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என சிந்திப்போம்.
தமிழர்க்கு தீங்கு செய்யும் கூடங்குளம் அணு உலையை உணர்வுடன் எதிர்ப்போம்

வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழர்களின் தாழ்வு எண்ணம் தேவையா?

இப்போது தமிழர்கள் பலருக்கு தங்களின் உயரிய மொழிபற்றியோ, அல்லது இங்கு விரிந்து கிடக்கும் அளவு இல்லாத மெய்மங்களைபற்றியோ அறிந்திருக்கவில்லை . பாவம் இது அவர்களின் பிழை இல்லை என்பது எமது எண்ணம்இந்த உயரிய மொழியை பற்றி அவர்களுக்கு உணர்த்த வில்லை என்பது எமது எண்ணம் . இவர்கள் தமிழையும் படிப்பதில்லை , இவர்கள் மேதாவித்தனம் நிறைந்து உள்ளதாக கூறும் ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழிகளையோ ஊன்றி படிபதில்லை அப்படி படித்தால் அவர்களை தானே தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும் இப்படி பட்டவர்களிடம் யார் வேண்டுமானாலும் என்ன கூறினாலும் அப்படியே நம்பி விடுவார்கள்.
தமிழர்களின் அறிவைத்தவிர, ஆக இந்த மண்டூகங்களுக்கு அறிவு தெளிந்த நாம்தான் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற எண்ணத்தோடு பொறுமையாக சொல்வோம்.

தமிழ செல்வங்கள் அளவில்லாமல் கொட்டி கிடைக்கிறது இதை சீண்ட ஆளில்லாமல் கிடைக்கிறது . அதிலொன்று திருமூலரின் திருமந்திரத்திலிருந்து

சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே .

அதாவது சூரிய காந்தம் என திருமூலர் குறிப்பது இன்று பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் அறியப்படதான லென்சைதான். அதாவது லென்சையும் பஞ்சியையும் ஒன்றாக வைத்து இருந்தால் பஞ்சி எரியாது அதை சூரியனின் குவிமையத்தில் முறைப்படி காட்ட அது பஞ்சை சுட்டு எரிக்கும் என்கிற ரீதியில் பதிவு செய்கிறார் . அதாவது திருமூலரின் காலம் என அறியப்பட்டது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது . இந்த காலங்களில் லென்சை அதன் பயன்பாட்டை தமிழன் அறிந்து வானவெளியில் தமிழன் உயர்ந்து இருந்தமையை காட்டுகிறது . இதை தமிழ் மாடுகளுக்கு நாம் காட்டவேண்டியது நமது தேவையாகிறது . அறிவு துறையினரே நீங்கள்தான் இந்த பக்கத்திற்கு வருகிறீர் நீங்கள்தான் எல்லோருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்

தமிழர் கலைகளை காப்போம் வென்றெடுப்போம்..

நண்பர் சுகுமாரன் இந்த பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் என கேட்டமையலும் .டென்மார்க்கிலிருந்து சந்திரகௌரி தொடர்ந்து எழுத கோரியமையாளும் பதிவு செய்யபடுகிறது . நாம் தொடர்ந்து எழுதமைக்கான காரணம் இந்த பக்கத்திற்கு அதிகமானோரை வரவழைக்க இயலவில்லை எனவேதான்.

வியாழன், 28 ஜூலை, 2011

மூன்று முடிச்சு




சந்திர கௌரி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......பிடித்த உறவுகள்:


என்னைதத்து பிள்ளையாக எடுத்க்கொண்ட இரண்டாவது தாய்மடி என் அக்காள்...

அக்காள்குழந்தைகள்........

நண்பர்கள் சில தோழர்கள்& வாசிக்கும் நீங்கள் எல்லோருமே .......


பிடித்த உணர்வுகள்:


அமைதி
சினம்
நகைப்பு


பிடிக்காத உணர்வுகள்:

தலைக்கனம்
மற்றவரை மதிக்காமை
அலட்சியபடுத்துத்தல்

முணுமுணுக்கும் பாடல்கள்:

அறிவிற்கு விருந்தாகும் திருக்குறளே (அறிவாளி திரைப்படம் )

என்தலைவர் சாகவில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை








புதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்
@
@
@


பிடித்த திரைப்படங்கள்:

ஆணிவேர்
ஆணிவேர்
ஆணிவேர்



அன்புத் தேவைகள்:


என் உறவுகள் ............
என் நண்பர்கள்.............
உலகில் உள்ள எல்லோருமே நலமுடன் வாழுவது ............

வலிமையை அழிப்பவை:


நம்பிக்கை இன்மை

துய எண்ணம் இன்மை

தேவை இல்லாது கெடுக்க எண்ணுவது

குட்டித்தத்துவம்:
உண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.

பகிர்தல் அகந்தையை வலியில்லாமல் வேரறுத்துவிடும் பகிர்ந்தால் அந்த வெற்றிடத்தை மகிழ்வு இது நிரப்பிவிடும் .

அறிவியல் அறிவு மக்களை ஒன்று படுத்துகிறது ஆனால் கண்மூடித்தனமான மதப்பற்றோ மக்களை பாகுபடுத்துகிறது.





பயமுறுத்தும் பயங்கள்:

தமிழன் இதே நிலையில் இருந்தால் தாய்த் தமிழகம் காணமல் போகுமே (ஈழத்தமிழர் தாம் நாட்டை காத்துக் கொள்வார்கள் விரைவில் தமிழீழம் மலரும் ஆனால் தமிழ் நாடு ?)

தமிழ் பண்பாடு அழிவை நோக்கி போவதை எண்ணி ...

தமிழர்களுக்கே உரிய கூட்டு குடும்ப உறவுகள் சிதைவை நோக்கி செல்லுதல்பற்றியது ...



அடையவிரும்பும் நிலையான விருப்பங்கள்:


தமிழீழம் மலரவேண்டும்

தமிழர்களின் உயரிய கலைகள் காக்கப்படவேண்டும்
.
தமிழர்கள் விழிக்க வேண்டும்.நோயின்றி வாழ வேண்டும் .

கற்க விரும்புவது:

எல்லாமொழிகளையும் கற்கவேண்டும்

தூய்மையான சமையற்கலை

தையற்கலை



வெற்றிபெற வேண்டியவை:


99 பங்குமனோதிடம்

1 பங்குஉழைப்பு

100 பங்கு நேர்மை

சோர்வு நீக்கத் தேவையானவை:

தூய்மையான உணவுகள்

தூய்மையான எண்ணம்

தூய்மையான சூழல்


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது:

உளம்
உடல்
உதவி செய்யும் எண்ணம் உடையவர்களின் தொடர்பு .



முன்னேற்றத்திற்குத் தேவை:

திடமான எண்ணம்

வெற்றி குறித்தான தீர்க்கமான எண்ணம்

வெற்றி பெறுவோம் என்ற தன் முனைப்பு .



எப்போதும் அவசியமானது:

பணம்( இந்த உலகில் )
நோய் இல்லாத உடல்நலம்
சோர்ந்து போகாத உள்ளம் .



பிடித்த தத்துவம்:

காரணமும் விளைவும் ஒன்றை ஒன்று பின் தொடரக்கூடியது ஒன்றன் விளைவு மற்றொரு விளைவிற்கு காரணமாகிறது விளைவு இல்லையேல் காரணத்தை குறை கூற வேண்டாம்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ..

அறிவியலை அடைவதற்கு பகட்டான (ஆடம்பரமான ) பாதை எதுவுமில்லை .அதன் செங்குத்தான பாதைகளைக்கண்டு அச்சம் அடையாதவர்கள் மட்டுமே அதன் முகட்டை அடைய இயலும் .




தெரிந்து தெரியாது குழம்புவது:

எப்படி மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறார்கள்
.
எப்படி மற்றவரை ஏமாற்றுகிறார்கள்.

எப்படி இப்படி செய்ய இயலுகிறது .



எரிச்சல்படுத்துபவர்கள்:

கருணாக்கள்
காட்டி கொடுப்பவர்கள்
களவு /விபச்சாரம் செய்பவர்கள்



மனங்கவர்ந்த பாடகர்கள்:

சிட்டுக்குருவிகள்
இனிய தென்றல்
தேனிசை செல்லப்பா


இனிமையானது:

காதல் ...
மனித வாழ்கை ...
சலன மற்று இருக்கும் உள நிலை .



சாதித்தவர்களின் பிரச்சினை:

தோல்வி
தோல்வி
தோல்வி .இல் இருந்து வெற்றி பெற்றது .


பிடித்த பழமொழிகள்:

நீ வாழ பிறரை கெடுக்காதே .
வாழ்வது ஒருமுறை வளமோடு வாழு.
உயர்ந்து நில் எழுந்து நில் .

புதன், 29 செப்டம்பர், 2010

பழந்தமிழகம்

                                   பழந்தமிழகம்
" வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும் 
தெனாஅது  உருகெழு  குமரியின்  தெற்கும் 
குணாஅது  கரைபொரு  தொடுகடல்  குணக்கும் 
குடாஅது  தொன்றுமுதிர்  போவ்வத்தின்  குடக்கும் ''

 என  பழந்தமிழகம்   விரிந்து  இருந்தமை  காட்டும் இன்று ஆப்கநித்தானம்  ,
நேப்பாளம் , பூட்டான், பங்களாதேசம் , இலங்கை , மாலத்தீவு , மடகாசுகர் , என்று   பலநாடு  களாகக் கிடக்கும்  இந்தய  துணைக்கண்டம்  முழுவதுமே 
"பழந்தமிழகம் "  ஆக  இருந்ததை  கழக (சங்க ) இலக்கியம்  சுட்டிக்காட்டும்              .
  " பழ்ருளி  யாட்ருடன் பன்மலை  யடுக்கத்துக்  
   குமரிக்  கோடுங் கொடுங்கடல்  கொள்ள 
   வடதிசைக்  கங்கையும்  இமயமும்  கொண்டு 
  தென்றிசை  யாண்ட தென்னவன்  வாழி"  
  என்று இளங்கோவடிகள்     
        பாடுவதாலும்   தமிழன்  பிறந்தகம்
குமரி நாடாதலாலும் குமரிக்கண்ட  தமிழ் நிலமுழுவதும்  தமிழனே  ஆண்டமை  அறியலாகும்  செய்தியாகும் .   

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மூத்த குடி

"பொய்யகல   நாளும்  புகழ்விளைத்த  லென்வியப்பாம்
வையகம்  போர்த்த  வயங்கொலிநீர் -கையகலக்
கற்றோன்றி  மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி  மூத்த  குடி ."  
!