வியாழன், 28 ஜூலை, 2011

மூன்று முடிச்சு
சந்திர கௌரி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......பிடித்த உறவுகள்:


என்னைதத்து பிள்ளையாக எடுத்க்கொண்ட இரண்டாவது தாய்மடி என் அக்காள்...

அக்காள்குழந்தைகள்........

நண்பர்கள் சில தோழர்கள்& வாசிக்கும் நீங்கள் எல்லோருமே .......


பிடித்த உணர்வுகள்:


அமைதி
சினம்
நகைப்பு


பிடிக்காத உணர்வுகள்:

தலைக்கனம்
மற்றவரை மதிக்காமை
அலட்சியபடுத்துத்தல்

முணுமுணுக்கும் பாடல்கள்:

அறிவிற்கு விருந்தாகும் திருக்குறளே (அறிவாளி திரைப்படம் )

என்தலைவர் சாகவில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்
@
@
@


பிடித்த திரைப்படங்கள்:

ஆணிவேர்
ஆணிவேர்
ஆணிவேர்அன்புத் தேவைகள்:


என் உறவுகள் ............
என் நண்பர்கள்.............
உலகில் உள்ள எல்லோருமே நலமுடன் வாழுவது ............

வலிமையை அழிப்பவை:


நம்பிக்கை இன்மை

துய எண்ணம் இன்மை

தேவை இல்லாது கெடுக்க எண்ணுவது

குட்டித்தத்துவம்:
உண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.

பகிர்தல் அகந்தையை வலியில்லாமல் வேரறுத்துவிடும் பகிர்ந்தால் அந்த வெற்றிடத்தை மகிழ்வு இது நிரப்பிவிடும் .

அறிவியல் அறிவு மக்களை ஒன்று படுத்துகிறது ஆனால் கண்மூடித்தனமான மதப்பற்றோ மக்களை பாகுபடுத்துகிறது.

பயமுறுத்தும் பயங்கள்:

தமிழன் இதே நிலையில் இருந்தால் தாய்த் தமிழகம் காணமல் போகுமே (ஈழத்தமிழர் தாம் நாட்டை காத்துக் கொள்வார்கள் விரைவில் தமிழீழம் மலரும் ஆனால் தமிழ் நாடு ?)

தமிழ் பண்பாடு அழிவை நோக்கி போவதை எண்ணி ...

தமிழர்களுக்கே உரிய கூட்டு குடும்ப உறவுகள் சிதைவை நோக்கி செல்லுதல்பற்றியது ...அடையவிரும்பும் நிலையான விருப்பங்கள்:


தமிழீழம் மலரவேண்டும்

தமிழர்களின் உயரிய கலைகள் காக்கப்படவேண்டும்
.
தமிழர்கள் விழிக்க வேண்டும்.நோயின்றி வாழ வேண்டும் .

கற்க விரும்புவது:

எல்லாமொழிகளையும் கற்கவேண்டும்

தூய்மையான சமையற்கலை

தையற்கலைவெற்றிபெற வேண்டியவை:


99 பங்குமனோதிடம்

1 பங்குஉழைப்பு

100 பங்கு நேர்மை

சோர்வு நீக்கத் தேவையானவை:

தூய்மையான உணவுகள்

தூய்மையான எண்ணம்

தூய்மையான சூழல்


எப்போதும் தயாராக இருக்க வேண்டியது:

உளம்
உடல்
உதவி செய்யும் எண்ணம் உடையவர்களின் தொடர்பு .முன்னேற்றத்திற்குத் தேவை:

திடமான எண்ணம்

வெற்றி குறித்தான தீர்க்கமான எண்ணம்

வெற்றி பெறுவோம் என்ற தன் முனைப்பு .எப்போதும் அவசியமானது:

பணம்( இந்த உலகில் )
நோய் இல்லாத உடல்நலம்
சோர்ந்து போகாத உள்ளம் .பிடித்த தத்துவம்:

காரணமும் விளைவும் ஒன்றை ஒன்று பின் தொடரக்கூடியது ஒன்றன் விளைவு மற்றொரு விளைவிற்கு காரணமாகிறது விளைவு இல்லையேல் காரணத்தை குறை கூற வேண்டாம்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ..

அறிவியலை அடைவதற்கு பகட்டான (ஆடம்பரமான ) பாதை எதுவுமில்லை .அதன் செங்குத்தான பாதைகளைக்கண்டு அச்சம் அடையாதவர்கள் மட்டுமே அதன் முகட்டை அடைய இயலும் .
தெரிந்து தெரியாது குழம்புவது:

எப்படி மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறார்கள்
.
எப்படி மற்றவரை ஏமாற்றுகிறார்கள்.

எப்படி இப்படி செய்ய இயலுகிறது .எரிச்சல்படுத்துபவர்கள்:

கருணாக்கள்
காட்டி கொடுப்பவர்கள்
களவு /விபச்சாரம் செய்பவர்கள்மனங்கவர்ந்த பாடகர்கள்:

சிட்டுக்குருவிகள்
இனிய தென்றல்
தேனிசை செல்லப்பா


இனிமையானது:

காதல் ...
மனித வாழ்கை ...
சலன மற்று இருக்கும் உள நிலை .சாதித்தவர்களின் பிரச்சினை:

தோல்வி
தோல்வி
தோல்வி .இல் இருந்து வெற்றி பெற்றது .


பிடித்த பழமொழிகள்:

நீ வாழ பிறரை கெடுக்காதே .
வாழ்வது ஒருமுறை வளமோடு வாழு.
உயர்ந்து நில் எழுந்து நில் .