புதன், 21 செப்டம்பர், 2011

தமிழர் மெய்யியல்

தமிழர்கள் அறிவிலும், அறிவியலிலும் , வானியலிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . அதனையொட்டி அடுத்த இடுகையும் இருக்கும் இந்த இடுகை அதனை ஒட்டி இல்லாமலிருந்தாலும் அதை தொட்டு படரும் ஒரு பணியை செய்ய போகிறது .

தமிழின் சிறப்புகள் தமிழர்கள் அறியப்படாமலே இருக்கிறது அதனால் வருகிறதுதான் இந்த அடிமைத்தனம் . முதலில் புத்தனுக்கு முன்பாகவே தோற்றம் கொண்ட பக்குடுக்கை நன்கணியார். சமயம் சரதவராக இருந்திருக்கிறார் . சமயம் சாராமை என்பது அடிப்படையில் கடவுள் மறுப்பை ஒட்டியது என நாம் சொல்ல தேவையில்லை
.
இன்பங்களும் துன்பங்களும் இயற்கையாக நடப்பனவேயன்றி வேறல்ல . இது மனித வாழ்வின் பிரிக்கயியலா கூறுகள் . இதை வலியுறுத்தும் பாடல் ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடப்பட்டு உள்ளது . இது இயங்கியலை அடிப்படியாக கொண்டு இயங்கும் பொருள்முதல் வாத கோட்பாட்டை சேர்ந்ததாகும்
பாடலைப் பார்ப்போம் .....

.ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல் புணர்ந்தோரே !

துறை : பெருங்காஞ்சி (புறநானூறு 194 )
பக்குடுக்கை நன்கணியார் படியாது .

பாடலின் சுருக்கமான கருத்தாக்கம் . இரண்டு தோழிகள் இருவர் , ஒருத்தி மணமானவள் மற்றவள் மணமாக இருப்பவள் . மணமேற்க்க போகும் சூழலில் . திருமணத்தை காணவந்த தோழியின் கணவன் தேரில் இருந்து விழுந்து மரித்து போகிறான் . இந்த சூழலில் மணமுடித்தவள் தன் கணவனுடன் இல்லறம் துய்த்து இன்பத்துடன் இருக்கிறாள் மற்றவள் பறையொலி களின் நடுவே பிணத்துடன் அழுகிறாள் இது முறையானதா? கடவுள் எப்படி ஒருத்தியை இன்பதுடனும் ஒருத்தியை துன்பத்திலும் இருக்கவைக்கிறான் . என வினவுவதாக் இருக்கிறது
இதை பாடிய காலத்தை நாம் சற்று எண்ணிப்பார்ப்பது தேவையாகிறது அதாவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதவே இந்த கருத்தாக்கம் எழுந்தது என்றால் தமிழர்களின் மெய்யறிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என சிந்திப்போம்.
தமிழர்க்கு தீங்கு செய்யும் கூடங்குளம் அணு உலையை உணர்வுடன் எதிர்ப்போம்

7 கருத்துகள்:

Ramani சொன்னது…

இதுவரை அறியாத அரிய தகவல்
அறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதவே இந்த கருத்தாக்கம் எழுந்தது என்றால் தமிழர்களின் மெய்யறிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என சிந்திப்போம்.
தமிழர்க்கு தீங்கு செய்யும் கூடங்குளம் அணு உலையை உணர்வுடன் எதிர்ப்போம்/

"தமிழர் மெய்யியல்" பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

சந்திரகௌரி சொன்னது…

இராவணன் புஷ்பகவிமானத்தில் சீதையைக் கடத்திச் சென்றார் என்றால், நிச்சயம் ரைட் சகோதரர்களுக்கு முன்னமே விமானம் இருந்திருக்கின்றது அல்லவா! இப்படிப் பல நிகழ்வுகள் பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழர் பெருமைகளை அடையாளங்காட்டி நிற்கின்றன. தரமான உங்கள் பதிவுக்கு நிறைவான வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே..

Selmadmoi girl சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

தமிழ் மெய்யியல் பகிர்வை இப்போதான் பார்க்கிறேன்.தொடருங்கள் தயா !

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான தகவலுக்கு மிக்க நன்றி உங்களிற்கு என் பிந்திய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .